மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய 23 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அரச மருந்தகக் கூட்டுத்தாபனதினால் கொள்வனவு செய்யப்பட்ட சைனோ பாரம் தடுப்பூசிகளே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
மேலும் சீன இராணுவத்தினரால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



