அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்கி வைத்திருப்பதால் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
தற்போது நாட்டில் டெல்டா வைரசின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்ற இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையிலுள்ள அனைத்து தடுப்பூசிகளும் டெல்டா விற்கு எதிராக போராடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் அனைவரும் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



