கிரிபத்கொட பிரதேசத்தில் 11 கிராம் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த பெண் கொனஹேன காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11 கிராம் ஹீரோயினும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 26 லட்சம் ரூபாய் பணமும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



