நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அரசாங்கத்தினால் வழங்குகின்ற நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய அரசாங்கத்தினால் 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
இந்த நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தகுதியான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பெயர் பட்டியலில் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டிருந்தார்.



