நாட்டின் பல பாகங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply