நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 18 -30 வயதிற்கு உட்பட்ட இலங்கையர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தடுப்பூசிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் 18-30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



