எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெரும் ஆபத்தினை சந்திக்கவுள்ள இலங்கை!

0

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆறிவித்துள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 3839 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாத்திரம் 195 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் கொவிட் தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலம் முதல் நாள் ஒன்றிலேயே பதிவான அதிகளவான தொற்றாளர்கள் மற்றும் மரணத்தின் எண்ணிக்கை இதுவாகும்.

மேலும் நாட்டில் நிலவும் நிலையினைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

Leave a Reply