கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல்.

0

தற்போது நாட்டையே பெரிதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் தாக்கத்தில் இருந்து குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளினை பாதுகாக்கும் நோக்கில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபையில் விசேட கலந்துரையாடல் நேற்ற இடம்பெற்றது.

இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் மற்றும் சபையின் செயலாளர் திருமதி. மாலினி அசோக்குமார், சபையின் உப தவிசாளர்,உறுப்பினர்கள் ,பிரதேச சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், ஜம்மியத்துல் உலமா சபையின் புல்மோட்டை மற்றும் குச்சவெளி கிளை தலைவர், செயலாளர் மற்றும் புல்மோட்டை, குச்சவெளி, நிலாவெளி பகுதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பிரதேச வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரதேச மக்களின் நலன் கருதி தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றால் போல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் கட்டாயமாக மூடப்பட வேண்டும். இச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு கௌரவ தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply