சொட்டு நீர்பாசன முறை தொடர்பான விழிப்புணர்வு!

0

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் விவசாய நீர்ப்பாசனத்தில் சொட்டு நீர்ப்பாசன முறை தொடர்பான செயலமர்வொன்று இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழி காட்டுதளுக்கு இணங்க இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் பயிர்ச் செய்கையின் போது நீர் விரயமாவதை தடுக்க சொட்டு நீர்ப்பாசன முறை தொடர்பிலான விழிப்புணர்வுகளை தம்பலகாமம் பிரதேச விவசாய போதனாசிரியர்கள் பயிர்ச் செய்கையாளர்களுக்கு விரிவுரையளித்தனர்.

இதில் கல்மெட்டியாவ வடக்கு, மீரா நகர், முள்ளிப்பொத்தானை கிழக்கு ,பாலம்போட்டாரு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய குறைந்தளவிலான பயிர்ச் செய்கையாளர்களை கொண்டு சுகாதார நடை முறைகளை பின்பற்றி குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

Leave a Reply