சமையல் எரிவாயுவுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு!

0

தற்போது நாட்டின் சில பகுதிகளில் வீட்டு சமையல் எரிவாயுவுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கமைய வர்த்தக அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் சந்தையில் வீட்டு சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை தீர்த்தமை மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் சந்தைக்கு அவசியமான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு என்பவற்றை அடுத்து குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில பிரதேசங்களில் தொடர்ந்து சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சில விற்பனையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply