கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நேற்று காக்காமுனை பிரதேசத்தில் வைத்து சுமார் 24 மீனவர்களுக்கு வல்லம் வலை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட இதில் பூவரசந்தீவு,சமாச்சந் தீவு,காக்கா முனை போன்ற மீனவர்கள் தங்களது வாழ்வாதார திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இது அவர்களுக்கு வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.



