நாட்டில் கொரோனா 3ஆவது அலையின் வீரியம் தொடர்ந்தும் நீடிப்பதன் காரணமாக கிண்ணியா தள வைத்திய சாலையில் இரத்த மாதிரிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரத்ததான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிண்ணியா தள வைத்தி யசாலையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
கிண்ணியா தள வைத்தியசாலை யின் இரத்த வங்கிக்குப் பொறுப்பாள வைத்தியர்.ஹில்மி முகைதீன் பாவா தலைமையின் கீழ் நடைபெற்றது.
இவ்விரத்ததானம் வழங்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தமது இரத்தங்களை நன்கொடையாக வழங்கினர்
இவை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



