கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 50 வீதமானவர்களுக்கு பிராணவாயு கட்டாயம் தேவை!

0

கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 50 வீதமானவர்களுக்கு பிராணவாயு வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நோய் அறிகுறிகள் இருக்குமாயின் கடினமான தொழில்களில் ஈடுபடாது உடனடியாக வைத்தியரை நாடி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சிலர் தங்களுக்கு தொற்று உறுதியானத்தை அறியாது வீடுகளில் அல்லது பணியிடங்களில் கடினமான தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படதன் பின்னரே வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.

இதன் காரணத்தால் இது போன்றவர்களுக்கு பிராண வாயுவினை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் கொவிட் 19 தொற்று தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply