வடமேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமானவரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

0

இன்று முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் வடமேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமானவரி பத்திர விநியோகமானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

தற்போது நாட்டில் சடுதியாக உயர்ந்து வரும் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினாலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பிரதம செயலாளர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலகட்டத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரத்திற்கு வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply