ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் மன்னார் பூனரின் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 2,157 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர்கள் புனரின் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பாரவூர்தியிலிருந்த 1,157 கிலோகிரம் உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே பாரதத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு மன்னாரில் சந்தேகத்துக்கிடமான பாரவூர்தியை பரிசோதித்த போது 1000 கிலோ கிராம் உலர் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட உலர் மஞ்சள்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகா ட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



