இந்தியாவின் தமிழகத்தில் எஞ்சியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் திகதியை தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, இடைவெளியாகியுள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் திகதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



