ஒரு வார காலத்திற்கு பண்டாரவள நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய இன்று இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை குறித்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அபாய நிலையினை கருத்திற்கொண்டே எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடுவதென இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



