நாட்டில் தற்போது மாகாணங்களுக்கிடையில்
பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தொடருந்து சேவைகளும் 64 ஆக மட்டுப் படுத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் அம்பேபுஸ்ஸ வழியில் பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் கொச்சிக்கடை வரையிலும், கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் அளுத்கம வரையிலும் சேவையில் ஈடுபடும் என்று தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



