பதிவுத் திருமணம் நடத்துவது தொடர்பில் வெளியான தகவல்!

0

தனிமைப் படுத்தல் உத்தரவு குறித்து விரிவாக விளக்கம் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹனவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதிவுத் திருமணத்தை நடத்துபவர்களாயின் அதனை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வினை மணமக்களின் பெற்றோர்களுடனும் பதிவாளருடனும் மாத்திரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவர்களைத் தவிர வேறு எவருக்கும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறு மீறி செய்யப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply