நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் தொலுவ, தெல்தொட்ட, உடபலாத்த, உடநுவர ஆகிய பகுதிகளிலே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும் , இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.



