போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது.

0

வாழைச்சேனை, பிறைந்துறைச் சேனை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனையில் காவல் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி தலைமையில் காவல்துறையினர் பிறைந்துறைச் சேனை பகுதியில் உள்ள இரு வீடுகளை சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய நபர் ஒருவரை 940 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும், 18 வயதுடைய ஒருவரை 18 பக்கட்கள் கொண்ட 1,570 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply