சுகாதாரப் பிரிவினரால் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவரச கோரிக்கை!

0

நாட்டில் மிக வேகமாக தீவிரம் அடைந்து வரும் கொவிட் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சுமார் 4 வாரங்களேனும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதோடு குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது.

அத்துடன் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றார்களின் எண்ணிக்கை 3,000 ஐ நெருங்கியுள்ளது.

இதற்கமைய நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் 100 ஐ கடந்துள்ளது.

குறித்த நிலை தொடர்ந்து நீடித்தால் அபாயகரமான நாடக இலங்கை மாறும் என அரசாங்கத்துக்கு அறிவித்ததாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply