அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அடுத்ததாக இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயத்தை அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த குழுவில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 29 வது நாளாகவும் தொடர்கிறது.
மேலும் தங்களது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் நமது போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தனர்.



