க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்!

0

2020ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப் புறக்கணிப்பு செயற்பாடே இதற்கு காரணம் என ஜி.எல் பிரீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த பரிட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்ளே தோன்றியுள்ளனர்.

இவர்களுள் ஒரு லட்சத்து 69000 பேர் அழகியல் கற்கைகளை தெரிவு செய்தவர்கள் ஆவர்.

அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் செய்முறை பயிற்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் க. பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply