சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்ககளுடன் நபரொருவர் கைது!

0

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்ககளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய திவிலபிட்டி- துன்கஹா பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்..

மேலும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 770,000 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply