நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் அச்சுறுத்தல் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணத்தால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது நிச்சயமற்ற செயற்பாடாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் சற்று முன்னதாக குறித்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார தரப்பினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களும் அமையவும் மேலும் சில திட்டங்களுடனும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதிக்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடசாலை கல்வி சாரா ஊழியர்களுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நிறைவடைந்ததன் பின்னரே செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தவரையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்



