விமானப்படைக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றில் இருந்து வெடி பொருட்களை திருடிய விமானப்படை அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து திருடப்பட்டுள்ளதாக விமானப்படை ஒழுக்காற்று பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் திருடப்பட்ட 70 கிலோ 700 கிராம் வெடி பொருளுடன் முச்சக்கர வண்டி ஒன்றையும் காவல்துறையினர் கைதுயகப்பபடுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் குறித்த வெடி பொருள் கிடங்கிற்கு பொறுப்பாக இருந்த விமானப்படை அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



