நாடு பூராகவும் எந்தவொரு நோய் அறிகுறியும் இல்லாத கொவிட் நோயாளர்களை இன்று முதல் அவர்களது வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோயாளர்களுக்கு தேவையான தகவல்களை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்வதற்கு 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எந்த ஒரு நோய் அறிகுறி அற்ற அபாய நிலை இல்லாத 2 முதல் 65 வயதிற்கு இடைப்பட்ட கொவிட் 19 நோயாளர்களை அவர்களது வீட்டில் வைத்த கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



