நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பைக் கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோயினால் பீடிக்கப்பட்டு எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்க்ளுக்கு நாளை முதல் தடுப்பூசியை செலுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
இந்நிலையில் நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இருப்பவர்கள் 1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முன் பதிவினை மேற்கொள்ள முடியும் என கோரப்படுள்ளது.



