உலகளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 லட்சம் பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இந்த தொற்றுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையே இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு மாத காலமாகவே இந்த தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உலகளவில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம் சரிந்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது 130 நாடுகளுக்கு மேலதிகமாக பரவலடைந்துள்ளது.
மேலும் ஜப்பானில் கொரோனா பாதிப்பு 9 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
