அத்துமீறி சரணாலதிற்குள் நுழைந்து மான்களை வேட்டையாடிய இரு நபர்களும் கைது!

0

யால-கல்கே சரணாலயப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்களை வேட்டையாடிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சரணாலயத்திற்குள் நுழைந்து காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தனர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த சுற்றிவளைப்பின் போது 130கிலோ கிராம் சாம்பார் மான்களின் இறைச்சி காவல்துறையினறால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply