குழந்தைச் செல்வம் கிடைக்கும் ஆலய தரிசனம்.

0

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்பார்கள்.

இந்த நாள் இந்த ஆண்டு வருகின்ற 11.8.2021 அன்று வருகின்றது.

ஆடிப்பூர நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்தால் புத்திரப்பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர் களுக்கு புத்திர பேறு விரைவில் கிடைக்கும் என்பது எமது நம்பிக்கை.

சில ஆலயங்களில் முளைகட்டிய பயிரை தயாரித்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

ஆடிப்பூரத்தில் சில நாட்கள் முன்னதாகவே பச்சை பச்சை தண்ணீரில் நனைய வைப்பர்.

அது ஆடிப்பூரத்தன்று நன்கு முளை கட்டிய நிலையில் காணப்படும்.

அதை அம்பிகைக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு கொடுப்பர்.

அவர்கள் அதனை நம்பிக்கையோடு அதை சாப்பிட்டால் வாரிசு பிறக்கும்.

நம் இல்லத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

Leave a Reply