நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் 24 மணிநேர நீர்வெட்டு.

0

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வத்தளையில் சில பகுதிகளிலே குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கெந்தல பாலத்தினூடாக நீர் குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இனைக்கும் பணிகள் காரணத்தாலே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் வத்தளை நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மா போல, வெலிக்கட முல்ல , மருதனை வீதி, புவக்வத்த வீதி, கெரவாலபிதிய வீதியின் வீதியின் ஒரு பகுதி, கலகஹதுவ, ஹெந்தல வீதியின் நாயக்க கந்த சந்தி வரை அனைத்து கிளை வீதிகள் மற்றும் அல்விஸ் நகர ஆகிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டுஅமுல்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply