வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டுக்கள்!!!

0

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ருவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் குறித்த நபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை பி.வி.சிந்து வெல்ல வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply