திருகோணமலையில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி போராட்டம்.

0

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி திருகோணமலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது.

இதில் திருகோணணலை மாவட்டத்தை உள்ளடக்கிய பெருந் தொகையான ஆசிரியர் அதிபர்கள் பங்கு கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தரர்.

அத்துடன் குறித்த போராட்டத்தை நடை பவணியாக வீதியூடாக முன்னெடுத்துள்ளனர்.

இதில் கொத்தலாவள சட்டத்தை மீளப்பெறு ,அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply