நாட்டில் ஏற்படுள்ள கொவிட் அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது இன்று நீக்கப்பட்டுள்ளது,
இதற்கமைய மாகாணங்களுக்கிடையிலனா பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து பொதுமக்களும் தமக்குரிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுளளார்.
இந்நிலையில் ஆசனங்களின் எண்ணிக்கை அமையவே பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அதற்கு மேலதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு காவல்துறையின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து சேவைகளின் சேவைகளும் இன்று முதல் ஒழுங்கு முறையில் இடம்பெறும் என தொடர்ந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.



