40 கோடி ரூபாய் ஹெரோயினுடன் நபர் ஒருவர் அதிரடி கைது!

0

களுத்துறை- பண்டாரகம பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் 40 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை பொருளின் பெறுமதி 40 கோடி ரூபாய் என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் டுபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்ப பட்டிருக்கலாம் என என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply