சில பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக துபாயின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ்,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகள் விமானங்களுக்கே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 14 நாட்களில் இலங்கை உள்ளிட்ட அந்த நாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் வேறு இந்த இடத்திற்கும் பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



