தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கமைய மாணவர்களின் நலன் கருதி உரிய வகுப்புகள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் கொவிட் பாதிப்பு காரணத்தினால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் பலர் தமது தொழில்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சூழ்நிலையில் இணையத்தள வகுப்பிற்கு மட்டும் 75 சதவீத கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இதன் பின்னர் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தகங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்து உள்ளனர்.
இதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
அதில் அரசு பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



