இந்தியாவில் கொவிட் தொற்றின் வீரியம் சற்று குறைவடைந்து நிலையில் மீண்டும் கேரளாவில் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதற்கமைய கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொவிட் தொற்றல் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக அதிகரித்துள்ளது .
இந்நிலையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
அந்த மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அந்த குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் கேரளாவில் அதிகரித்து வரும் கொவிட் தாக்கம் காரணத்தினால் எதிர்வரும் சனி சனி மற்றும் ஞாயிற்று நாட்களில் முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



