அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை!

0

அரிசியின் விலையை இந்த வாரத்திலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு கிலோகிராம் சிவப்பரிசை 88 ரூபா என்ற சில்லறை விலைக்கு நுகர்வோர் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியை 92 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 97 ரூபாய் என்ற விலைக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply