ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் 40 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அரச மருந்தக்கள் கூட்டுத்தாபனதினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டில் வந்தடையவுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடிய தடுப்பூசிகளின் தொகை இதுவென சுட்டிக்காட்டப்படுள்ளது.
மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் 4 தொடக்கம் 6 ஆம் திகதிக்குள் குறித்த தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பான ஆயுதங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



