திருப்பதியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கமைய குறித்த கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர்ரெட்டி இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் துனை கோவில்களுக்கு பக்தர்கள் சிலர் நன்கொடையாக விவசாய நிலங்களை வாங்கியுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதத்தில் குத்தகைக்கு விட்டு இதில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை தேவஸ்தானமே விலைக்கு வாங்கி இதனை ஏழுமலையானின் நைவேத்தியத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் திருப்பதி தேவஸ்தானத்தின் துணை கோவில்களான அப்பலய குண்டா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசமங்காபுரம் சீனிவாசபெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் காணிக்கையாக தலைமுடியில் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று பரவல் காரணத்தினால் இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது மூன்றாவது அலையின் எச்சரிக்கை இருப்பதால் தற்போதைக்கு இலவச தரிசனம் ஆரம்பிப்பது குறித்து எந்தவிதமான திட்



