அரச தொழில் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள்!

0

பல்வேறு தொழில் பிரிவுகளில் 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்களாயின் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் மாணவர்களை இதற்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் நிறைவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராமப்புற மாணவர் ஐ. டி. ஐ. யில் இணைய வசதியாக பெருமாநல்லூர் அரசு உயர்நிலை பள்ளியில் அட்மிஷன் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பல்வேறு தொழில் பிரிவுகளில் 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்ற விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகை தரும் போது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சி பெறுவோருக்கு தரமான பயிற்சியுடன் இலவச லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், காலனி, பஸ், மாதாந்திர உதவித்தொகை ரூபா 750 ம் வழங்கப்படும்.

அத்துடன் இதுகுறித்த மேலதிக தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ள 95002 33407, 98432 63722 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை பெற்றுக்கொள்ளலாம் என ஐ.டி. ஐ முதல்வர் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply