வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டுள்ள 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கண்டறிவதற்காக மேல் மாகாணம் முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதற்கமைய குறித்த சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போது தொழிலுக்காக முன்வைக்கப்பட்ட வயதெல்லையை விட குறைந்த வயதினை உடைய சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



