உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சசில்லவா அறிவித்துள்ளார்.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெக்குலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவுன் பிம்புர பகுதியும்,

அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவும்,

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தும்போவில் தெற்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான தோட்டம் ஆகியனவே இவ்வாறு இன்று
காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply