உள்ளுராட்சித் தேர்தலை நகர்ப்புறங்களில் நடத்துவது தொடர்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த ஆலோசனை இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 திகதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்ப டாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



