தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ காற்று காரணத்தினால் இன்று நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதற்கமைய ஏனையர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமாரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும்
அத்துடன் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களிலும் கன மழையும்
அவ்வாறு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
அத்துடன் ஏனைய மாவட்டங்களில் வறட்சியான நிலையில் நிலவக் கூடும்.
மேலும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி போன்ற மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 மறும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிக்கிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



