எதிர்வரும் வார இறுதி விடுமுறை நாட்களில் அதி விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த கண்காணிப்பு நடவடிக்கைக்கா 10,000 காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மகாண எல்லைகளில் மேலதிக காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுபாடுகளை மீறி பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



