நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வீதியுடனான போக்குவரத்து இன்று காலை முதல் இராணுவத்தினரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



